24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்
இது தொடர்பில் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறுகையில், தற்போது பருவ பெயர்ச்சி காலநிலையுடனான மழையினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களில் நீர் தேங்குவதால் மீண்டும் நுளம்புகள் பெருகும் அபாயம் உண்டு.
அடையாளம் காணப்பட்ட 31 சுகாதார வைத்திய பிரிவுகளில் டெங்கு நோய் அனர்த்த நிலை காணப்படுகின்றது. கொழும்பு மாநகரம் அடங்களாக ஏனைய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 10 அனர்த்த வலையங்கள் உண்டு.
எனவே காய்ச்சல் இருக்குமாயின், ஓய்வு எடுப்பது முக்கியமாகும். 24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் வைத்தியரை நாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சளிக் காய்ச்சல்
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாகவு சளிக் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையில் நனைவதன் ஊடாக சளிக் காய்ச்சல் பூரணமாக குணமடையாது பாதிப்புக்களை ஏற்படுத்தும் நிலைமை காணப்படுவதால் சளிக் காய்ச்சலில் பீடிக்கப்பட்டவர்களும் உடல்நிலை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
