யாழில் நாமலிடம் விடுக்கப்பட்ட உருக்கமான கோரிக்கை! ஆனந்தசுதாகரன் விடுதலையாவாரா?
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்கைகள் சந்தித்துள்ளனர்.
இதன்போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்துள்ள நிலையில், பிள்ளைகள் தமது அம்மம்மாவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வடமராட்சியில் நாமல் ராஜபக்சவை சந்தித்து தமது தந்தையையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஆயுள் தண்டனை பெற்ற அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தப்பட்ட போதும் அது பலனிக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள நாமலிடம், ஆனந்தசுதாகரனின் மகன் கவிரதன், மகள் சங்கீதா உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுகாதார் 9 வருடங்களாக மெகசீன் சிலைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 9 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








