இலங்கையில் இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து
இலங்கையில் வேகமாக பரவும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்கள் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதனை தவிர்ப்பது கட்டாயம் என IDH வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது வைரஸிடம் இருந்து பாதுகாப்பு பெற கூடிய ஒரு நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கே இம்முறை கொரோனா அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இளைஞர்கள் அதிகமாக வெளியே பயணிப்பதனால் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
நாட்டு மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்றி செயற்படவில்லை என்றால் வெளிநாடுகளை போன்று பாதிப்பு நிலை ஏற்படும். சமகாலத்தில் வெளிநாடுகளில் வைத்தியசாலை கட்டமைப்புகள் தொற்றாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த கொரோனா தொற்று வேகமாக பரவினால் ஆபத்துக்கள் அதிகமாகிவிடும். இளைஞர் யுவதிகள் இம்முறை மிகவும் அவதானமாக செயற்படவில்லை என்றால் பாரிய ஆபத்து ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri