இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!
இலங்கையில், பொதுமக்கள் மத்தியில் 55 அகவைக்கு மேற்பட்டவர்கள், சுவாசத்தில் பிரச்சனை அல்லது கோவிட் தொற்று அறிகுறி என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுமாறும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இன்றைய தினம் 36 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1051 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகூடிய கோவிட் மரணங்கள் இதுவாகும். மேலும், இன்றைய தினம் இதுவரையில் 3,591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 151,311 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan