சாந்தனின் நிலைமையால் தமிழர் மத்தியில் அதிருப்தி: விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்
சாந்தனுக்கு சிகிச்சையளிப்பதற்கும், அவரை குடும்பத்தினருடன் இணைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் (29.01.2024) ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சுகயீனம் காரணமாக சாந்தனின் உடல் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றிருப்பதானது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்புகளுக்கும் இடையிலும் கொதிநிலை! தமிழரசுக் கட்சியின் தெரிவு குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து
கோரிக்கை
அத்துடன் சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் எடுத்தும் இந்திய மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு அவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு மீள் திரும்பி குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கோடு சம்பந்தப்பட்டு உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஏனையவர்களும் தங்கள் குடும்பங்களோடு இணைந்து வாழ காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வெண்டும் எனவும் அவசரமான வேண்டுகோளை விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
