இரண்டு வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைகிறது
கடந்த வெள்ளிக்கிழமையுடன்(26) ஒப்பிடும் போது இன்றையதினம்(29.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
மேலும், கடந்த இரு வாரங்களாக வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (29.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.28 ரூபாவாகவும், கொள்வனவு விலை 230.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 351.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.33 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
