மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு : பணிப்பாளரின் அவசர வேண்டுகோள்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் O+ வகை குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலைக்கு O+ குருதி தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே குறித்த O+ வகை இரத்தம் தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏனைய வகை இரத்தம் காணப்படுகின்றது. எனினும் O+ குருதி தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எனவே அவசரமாகக் குறித்த வகை இரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை நாடுமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 51 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
