வட்ஸப் பயனாளர்களுக்கு அவசர அறிவித்தல்
வட்ஸப் கணக்குகள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் எச்சரித்துள்ளது.
வட்ஸப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் என அந்த மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாய்ப்பு
அதன்படி, சமய நிகழ்ச்சிகள், பரிசுகளை வெல்வது அல்லது கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற வாய்ப்புகளை குறிப்பிட்டு தொலைபேசி எண்ணில் பெறப்பட்ட ரகசிய குறியீட்டை அவர்கள் கோருவதாக கூறப்படுகிறது.

ஹேக்கர்கள் வட்ஸப் குழுக்களில் இணைந்து பயனர்களின் கணக்குகளை கண்காணிப்பதாகவும் கணக்குகளை ஹேக் செய்த பின்னர், அவர்கள் கடன் கேட்டு ஹேக் செய்யப்பட தொலைபேசியில் உள்ள தொலைபேசி எண்களுக்கு அவசர செய்திகளை அனுப்புவதாகவும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் (SLCERT) மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
ஹேக்கர்கள் வட்ஸப் கணக்கை கட்டுப்படுத்தி, அந்த கணக்கில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை கூறி அவசரமாக பணம் அனுப்புமாறு உரிய நபர் கோருவது போலவே குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என கூறியுள்ளார்.
பிரச்சினை
ஆனால், அப்படி ஒரு செய்தி வந்தால், முதலில் அந்தக் கணக்கின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அந்த தகவல் உண்மையா என்பதை உறுதி செய்து, வட்ஸப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிந்தால், அந்தக் கணக்கை வைத்திருப்பவர் உடனடியாக அவருடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கு அதைப் பற்றி தெரிவிக்கவும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான நிதி மோசடிகளை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும் என பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல மேலும் கூறியுள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan