இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலநிலை காரணமாக அனர்த்தங்கள் நிகழுமாயின் உடனடியாக 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri