இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசியலமைப்பின்படி நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்தே அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொது நிதி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச நம்பிக்கையை உறுதி செய்வதற்கும் கணக்காய்வாளர் நாயகம் அவசியம்.
தெரிவித்துள்ள கருத்துக்கள்
பேரிடர் காரணமாக நாடு அதிக அளவு உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நேரத்தில் நிதி வெளிப்படைத்தன்மை மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் 2025 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றதிலிருந்து நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பதை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் அனைத்து அரசு நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் கணக்காய்வாளர் நாயகம் பதவி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பெயர்கள் அரசியலமைப்பு சபையில் பெரும்பான்மையை பெறவில்லை.
அதனால் அரசியல் சார்பற்ற, துறையில் நிபுணத்துவம் மற்றும் சுதந்திரமாக இயங்கக் கூடிய, சபையின் பொது ஒரு மித்த கருத்தை வெல்லக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan