இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதல்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

Colombo Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government Iran-Israel War
By Rakesh Mar 05, 2026 06:40 AM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(03.03.2026) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய நிலமைகளை கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து அந்த சவால்களை வெற்றிகொள்ள ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் கையிருப்புத் தேவைகளை நிர்வகித்தல், சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு குறித்து ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் இதன் மூலம் இந்நாட்டில் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதை நிர்வகிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதல்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Urgent Discussion At The Presidential Office

இந்த சூழ்நிலையால் இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் பாதிப்பை குறைக்க முயற்சி

தற்போதைய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தேவையான கையிருப்புகளைப் பேணுவது மற்றும் அதனை நிர்வகித்தல், உலக சந்தையில் ஏற்படவிருக்கும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த நிலைமைகளை நிர்வகிப்பது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

எரிவாயு கையிருப்புகளைப் பேணுவதற்கு போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாததால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைத் தேடுவது குறித்தும், அதற்காக பின்பற்றக்கூடிய குறுகிய கால மூலோபாயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதல்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Urgent Discussion At The Presidential Office

சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற இடங்கள் மூடப்பட்டதால் கப்பல் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, இலங்கையுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் கப்பல் நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது போதுமான உணவுக் கையிருப்பு உள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதல்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Urgent Discussion At The Presidential Office

இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு வழியாக இந்நாட்டிற்கு வருகை தருவதால், இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக விமானப் பயணத்தில் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அதற்காக தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக சலுகைப் பொதியை (பெகேஜ்) தயாரிக்குமாறும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் தலைமையில் இந்த விடயங்களை ஆராயவும் நிதி அமைச்சுக்கு அறிவுறுத்தினார்.

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதல்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் | Urgent Discussion At The Presidential Office

யாருக்கும் அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஸ்பெயின் கடும் எச்சரிக்கை

யாருக்கும் அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஸ்பெயின் கடும் எச்சரிக்கை

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.ஜி. அபோன்சு, சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பராக்கிரம திஸாநாயக்க ஆகியோருடன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை போன்ற துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US