இந்தியாவுடனான ஒப்பந்தத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அநுர அரசு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் இலங்கைக்கு வந்திருந்தார். இதன்போது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்களில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஒப்பந்தங்களின் அம்சங்கள்
எனினும், ஒப்பந்தங்களின் அம்சங்கள் தொடர்பில் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை.

அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகவும் பெறமுடியாத நிலையே உள்ளது. எனவே, ஒப்பந்தங்களின் அம்சங்கள் தொடர்பில் அரசு வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri