கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் பயிரினங்களை நடுகை செய்யவேண்டும்! ஆளுநர் வலியுறுத்து
எதிர்காலத்தை கருத்தில்கொண்டு விவசாயிகள் குறைந்த செலவில், கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் பயிரினங்களை நடுகை செய்யவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சிறுபோக பயிரச்செய்கையில் நவீன முறைகளைப் பயன்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில்,
விவசாயிகளின் வாழ்க்கை
'கட்டடங்கள் அமைப்பதைவிட விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே முக்கியமானது.
விவசாயிகளுக்கு எத்தகைய பயிர் இனங்களை நடுகை செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும், குறைந்த உற்பத்திச் செலவில் அதிகளவு விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இனம் எது என்பன தொடர்பில் எங்கள் அதிகாரிகள் அறிவூட்டவேண்டும்.
இப்போது விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
பெருமளவு முதலீட்டாளர்கள் அதை நோக்கி வருகின்றார்கள். எனவே விவசாயிகளுக்கு கடந்த காலங்களைப்போன்று சந்தைப்படுத்தல் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது.
நாங்கள் காலத்துக்கு ஏற்ப நவீன முறைகளையும் விவசாயத்தில் பயன்படுத்தவேண்டும். பாரம்பரிய முறையில் விளைச்சல்களை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
