இலங்கைக்கு எதிராக தடைகளை அமுல்படுத்த வேண்டும்! - பிரித்தானிய தொழிற்கட்சி
இன்று, முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை யுத்தத்தில் இறுதி கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாம் நினைவு கூறுகின்றோம் என தொழிற்கட்சி தலைவர் (Labour party Leader Sir Keir Starmer QC MP அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொழிற்கட்சி தமிழ் சமூகத்திற்கு ஆதரவாக நிற்கின்றது, இந்த நாளில் நாம் இறந்தவர்களை நினைவு கூறும் போது, எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை நோக்கி இருக்கின்றது.
ஆனால் நாம் இழந்தவர்களை நினைவுகூரும் அதே வேளை, உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த அட்டூழியங்களைச் செய்தவர்கள், 12 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதி மன்றத்துக்கு முன்னால் கொண்டு வரப்படவில்லை.
இன்று, இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க, தொழிற் கட்சி பாடுபடும் என உறுதி அளிக்கின்றோம்.
ஒழுங்கான வளமான மற்றும் பயனுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறையை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை நாம் வலியுறுத்துகிறோம்.
இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அமுல்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்தை நாங்கள் கடுமையாக வலியுறுத்துகின்றோம்.
இதன் மூலமாக இனப்படுகொலை, மனித
நேயத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை
பொறுப்புக் கூற வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று கொடுக்குமாறு
வேண்டுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.