அடிப்படை வசதி எதுவுமற்று வாழும் வயதானவர்களின் பரிதாபநிலை (Video)
பெற்றோர்களின் தியாகத்தை மறந்துவிடுவதால் தான் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.
தனது குழந்தையின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இரவு பகலாக வேலைப்பார்த்து சம்பாதித்த தந்தையும் தனது பிள்ளையை கவனித்துக்கொண்ட தாயும், அவர்களின் வயதானகாலத்தில், பிள்ளைகளுடன் ஒருசேர சேர்ந்து வாழமுடியாத நிலை தான் இன்றைக்கு இருக்கிறது.
வயதான பெற்றோரால் எந்த பயனும் இல்லையென்றால் அவர்களின் புகலிடம் முதியோர் இல்லமாகிவிடுகிறது. இது இன்று நேற்று அல்ல எப்போதும் தொடரும் அவலநிலை தான்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்
அதிலும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் உயர்பதவிக்கு வந்து அவர்களுக்கு திருமணமும் முடிந்துவிட்டால் தனது பெற்றோரை வீட்டில் வைத்திருக்க பிள்ளைகள் விருப்புவதில்லை.
இவ்வாறு பிள்ளைகளினால் கைவிடப்பட்ட முதியவர்களின் மனநிலை என்பது சொல்லண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றது.
இவ்வாறு மல்லாவி மங்கை நகர் என்ற கிராமத்தில் அடிப்படை வசதி எதுவுமற்று வாழும் வயதானவர்களின் பரிதாபநிலையை வெளிக்கொணர்கிறது எமது 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
WhatsApp / Viber - +94212030600 / +94767776363