மனைவி, பிள்ளைகளை நட்டாத்தில் விட்டு கணவர் 5ஆவது திருமணம்
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு.
அந்தவகையில், மனைவி மற்றும் பிள்ளைகளை நட்டாத்தில் விட்டு விட்டு கணவர் 5ஆவது திருமணம் செய்து கொண்டு வாழும் அவலமும் இந்த மண்ணிலேயே நடந்து வருவதை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்?
முல்லைத்தீவு - தேவிபுரத்தில் வாழும் இவ்வாறானதொரு குடும்பத்தின் நிலையை எமக்கு எடுத்துக் காட்டுகிறது ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்டியின் உறவுப்பாலம் நிகழ்ச்சி.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600



