புலம்பெயர்ந்த உறவுகளுக்கு நன்றி தெரிவித்த தாயக உறவுகள்(Video)
தமிழர்களின் சுயநிர்ணய இனவிடுதலைக்காக களமுனையில் இருந்து போராடிய எத்தனையோ முன்னாள் போராளிகளிகளும் அவர்களின் உறவுகளும் எம்மத்தியில் சொல்லண்ணா துயரங்களுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம்.
ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையின் இனப்போராட்ட யுத்தமும், இரத்த வரலாறும் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் கடந்தும் எமது முன்னாள் போராளிகளின் கண்ணீர் பயணம் மட்டும் எம்மண்ணில் தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது.
இவ்வாறு களமுனையில் இருந்து போராடிய பல முன்னாள் போராளிகளினதும் அவர்களது உறவுகளினதும் துயரங்களை வெளி உலகிற்கு திரையிட்டு காட்டும் உறவுப்பாலம் நிகழ்ச்சியினூடாக பலரது துயரங்களை வெளி உலகம் பாரத்துள்ளது.
இவர்களின் துயரை அறிந்த பல நல் உள்ளங்கள் அவர்களால் இயன்ற உதவிகளை செய்து எமது உறவுகளை பலப்படுத்தியுள்ளனர்.
எனவே உதவிய உள்ளங்களுக்கு பயனாளர்களின் நன்றிகளை சுமந்து வருகின்றது இந்த காணொளி,