நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர் குறித்து வெளியான தகவல்
நாட்டில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளி யார் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றுக்கு இலக்கான குறித்த பெண் யார் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எமக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
எனினும், மஹாவெவ பிரதேசத்தில் இந்தப் பெண்ணுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரது பீ.சீ.ஆர் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது மாரவில பொதுச் சுகாதார பரிசோதகரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும்.
இந்தப் பெண் நைஜீரியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் கணவருடன் நாடு திரும்பியுள்ளார் என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam