மேல் மாகாண பாடசாலைகளை இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்க முடிவு
மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளையும் முழுமையாக செயற்படவைப்பதற்கான முடிவு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அமைச்சர்,
பெப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் நம்புகின்றது.
இந்தநிலையில், தடுப்பூசிகள் அதே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் விநியோகிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏராளமான விமர்சனங்கள் உள்ளமையால் பாடசாலைகளை மூட முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,மேல் மாகாணப் பாடசாலைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இரண்டு நாட்களில் கலந்துரையாட தயாராக உள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam