கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள மலையக இளைஞர்கள்!சபையில் வலியுறுத்திய திகாம்பரம்
கோவிட் தொற்று காரணமாக கொழும்பில் பணிபுரிந்த இளைஞர்,யுவதிகள் மலையகம் திரும்பிய நிலையில், தொழில் இல்லாது தங்களது குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன.
எனவே, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை முறையாக அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுத்தால் இவர்களுக்கு பெரும் உதவியாகவிருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுபோன்ற வறுமை நிலைமை காரணமாகவே தீக்காயங்களுடன் உயிரிழந்த மலையக சிறுமி ஹிசாலினி போன்ற சிறுமிகள் கொழும்பில் வந்து பணிப்புரிகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கிளங்கன் வைத்தியசாலையானது மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கோவிட் தொற்றுக்கும் சிகிச்சை வழங்கும் ஒரே வைத்தியசாலையாகவுள்ளது. இங்கு 60 வரையான கட்டில்களே உள்ளன. திறப்பதற்கு தயார் நிலையில் உள்ள மஸ்கெலியா வைத்தியசாலையை உடனடியாக திறக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri