தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: தீர்வு காணும் செயற்பாட்டில் குதித்த ரணில்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான தலையீட்டை ஜனாதிபதி செய்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் நேற்று (27.03.2024) இடம்பெற்ற உரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த பிரேரணையை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென தோட்ட தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

பணத்தை அச்சிட முடியாது என அறிவித்த ரணில் : சிரமங்களுக்கு மத்தியில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்
தொழிற்சங்கங்கள் கோரிக்கை
அதன்படி, தாம் கோரும் நாளாந்த சம்பள உயர்வை வழங்குமாறும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
விசேட நடவடிக்கை
அதற்கு பதிலளித்த அமைச்சர் தன்னால் கொண்டுவரப்படவுள்ள புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
