மலையக தியாகிகள் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
மலையக மக்களின் தொழில், மொழி மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’ நேற்று கொட்டகலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பலரின் பங்கேற்பு
1940ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி முல்லோயா தோட்ட சம்பள உயர்வுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கோவிந்தன் உள்ளிட்ட அனைத்துத் தியாகிகளையும் நினைவுகூர்ந்து ‘பிடிதளராதே’ அமைப்பால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொட்டகலை கொமர்ஷல் லேக் வளாகத்தில் நடைபெற்ற பிரதான நினைவேந்தலில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றன.
முல்லோயா கோவிந்தனின் தியாகத்தை அடையாளப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10ஆம் திகதியை மலையக மக்கள் தியாகிகள் தினமாகக் கடைப்பிடித்து வருகின்றது.









