இருப்பை கட்டிக்காக்கவே மலையக தலைவர்கள் போராட்டம் செய்கின்றனர்- சச்சிதாநந்தன்
மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர், இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இந்த போராட்டத்தினை செய்து வருகின்றனர். இந்த போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிராகவும் தங்களது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும் தங்களது இருப்பை கட்டிக்காத்துக் கொள்வதற்குமே நடைபெற்று வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் இன்று கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவற்காக பாரியளவில் நிதியினை செலவு செய்துவருகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சமூக இடைவெளியும் இல்லாது போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
அந்த போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்து கொள்வதில்லை. மக்கள் அவர்களை நிராகரித்து விட்டார்கள். வருகின்ற தேர்தல் காலங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தாங்கள் மக்களிடம் இருக்கின்றோம் எனப் பாசாங்கு காட்டி இப்போது போராட்டத்தினை செய்து வருகின்றார்கள்.
ஆனால் மலையக மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். கோவிட் காலத்தில் களத்திலிருந்து சேவை செய்தது யார் என்று கடந்த காலங்களில் நிவாரணப் பொருட்களையும் தடுப்பூசிகளைக் இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்,ராமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொடுத்து செயற்படுத்தி வருகின்றார்கள்.
கோவிட் காலத்தில் காணாமல் போனவர்கள் தற்போது தேர்தல் காலம் வருவதால் ஏதாவது ஒரு துரும்பு சீட்டை எடுத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். இன்று நாட்டின் விலைவாசி பாரிய அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இன்று அரசாங்க தயாரிப்புக்கான விலைவாசிகளில் உயர்வு குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.
அதிகமான அத்தியாவசிய மற்றும் ஏனைய பொருட்களும் தனியார் துறையினரையே சார்ந்துள்ளன. இந்நிலையில் அவர்கள் என்றுமில்லாதவாறு பொருட்களின் விலைகளை அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் உயர்த்தி வருகின்றனர்.
அரசாங்கம் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்கும் போது அவர்கள் பொருட்களைப் பதுக்கி மக்களை பாரிய சுமையில் தள்ளி விடுகிறார்கள். ஆகவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் இது அரசாங்கத்தின் செயற்பாடல்ல அரசாங்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தினை வீழ்த்துவதற்காகவும் பலர் செயல்படுகின்றனர்.
அதே போல் ஆசிரியர்கள் போராட்டங்கள் தற்போது வலுப்பெற்றுள்ளன. அவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் கூட இந்த காலத்தில் இந்து போராட்டத்திற்கு உகந்த காலமல்ல எனினும் ஆசிரியர்களின் பிரச்சினையினை இந்த அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் இன்று ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மலையகம் முழுவதும் போராட்டங்கள் செய்தார்கள்.அப்போது ஜனாதிபதி ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆகவே தான் இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் பாரிய பிராயத்தணத்தின் மத்தியில் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆயிரம் ரூபாவினை வழங்காது கம்பனிகள் பல்வேறு நெருக்கடிகளைத் தொழிலாளர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள்.
இதற்கு சரியான தீர்வினை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும் கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் காரணமாகத்தான் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க முடியாது.
போனது எனப் பலர் தெரிவித்து வந்தார்கள். இன்று கூட்டு
ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் கம்பனிகள் தங்களது விருப்ப படி
செயற்பட்டு வருகிறார்கள். ஆகவே இதற்கும் ஒரு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுப்பார்
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam