மலையகத்தில் கடும் குளிர்! ஒருவர் மரணம்
மலையகத்தில் குளிர் காரணமாக ஒருவர் மரணமான சம்பவம் பதிவாகியுள்ளது.
நல்லத்தண்ணி காவல்துறையினர் இதனை உறுதிச்செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் சிவனடிபாதமலைக்கு தரிசிக்க சென்ற மினுவாங்கொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சமாரா மாலதி என்ற பெண்ணே அதிக குளிர் காரணமாக மரணமானதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்
சுகவீனம் அடைந்த நிலையில் நல்லதண்ணி நகரிலிருந்து, அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது பிரேத பரிசோதனை இன்றே நடைபெற உள்ளது என நல்லதண்ணி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, மலையகத்தின் நுவரேலிய உட்பட்ட பல பகுதிகளிலும் தற்போதைய காலநிலையில் கடும் குளிர் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri