IMF உடனான சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்கானதல்ல! - மத்திய வங்கி ஆளுநர்
அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ள இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகள் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் அதன் அந்நிய செலாவணி பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கான உதவும் திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்ருந்தது.
இலங்கையின் முன்மொழிவை சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரிகளிடம் முன்வைப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஏப்ரல் நடுப்பகுதியில் வாஷிங்டன் செல்வார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Meetings of Sri Lankan authorities with @IMFNews officials over the next few weeks are NOT for the purpose of #debt restructuring as stated by some news agencies. @CBSL #SriLanka #GoSL
— Ajith Nivard Cabraal (@an_cabraal) March 11, 2022