எதிர்வரும் நாட்களில் மோசமடையவுள்ள வானிலை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27.01.2026 வரை சற்று உயர்வடையும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று(22.012026) வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குளிர் நிலைமை நீடிக்கும்
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மாலையில், இரவில் நிலவும் குளிரான வானிலைக்கு காரணமான அதிகுறைந்த வெப்பநிலை எதிர்வரும் 27.01.2026 வரை சற்று உயர்வடையவுள்ளது.

இதனால் இன்று முதல் எதிர்வரும் 27.01.2026 வரை குளிர் நிலைமை சற்று சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் 29.01.2026 முதல் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை
குறிப்பாக வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்றும் பிற்பகலுக்கு பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே நாளை முதல் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், நெல் உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.




AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri