யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்கப் போவதாக மிரட்டிய நபர்
நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான பதற்ற நிலையை ஏற்படுத்துபவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட நபரை தேடும் விசேட விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டுள்ளதாக, தொலைபேசி அச்சுறுத்தல் விடுத்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் எச்சரிக்கை
வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதாக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
[X92J7E ]
கடந்த 27ஆம் திகதி இந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிறுவன மேலாளருக்கு போலியான தகவலை கொடுத்துள்ளார்.
பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.