மோடியின் இலங்கை விஜயமும், விலகாத மர்மங்களும்.. நடந்தது என்ன..!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் நோக்கம் தொடர்பாகப் பல செய்திகள் வெளிவந்திருந்தாலும், அவரது இலங்கை வருகைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது பெரிதாக பொதுப்பரப்புக்கு இன்னமும் வந்துசேரவில்லை.
பொருளாதார மேம்பாட்டு ஒப்பந்தம், தொழில்நுட்ப ஒப்பந்தம் போன்றனவற்றுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றும் ஒரு ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது எப்படியான பாதுகாப்பு ஒப்பந்தம் என்றோ, அந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற உண்மையான விடயங்கள் என்ன என்றோ பெரிதாக வெளியே இதுவரை வெளியிடப்படவில்லை.
நரேந்திர மோடி அவர்களின் இலங்கை விஜயம் தொடர்பாக பேசவேண்டிய விடயங்கள் என்று பல இருந்தாலும், நெருடலாக இருந்துவருகின்ற சில விடயங்கள் பற்றிக் கொஞ்சம் ஆழமாகப் பேசுகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: