கண்களுக்கு புலப்படாத புதிய ஆயுதம்: பாகிஸ்தானின் அதிரடி திட்டம்
அதிகாரபூர்வமாக தெரியாத பாதுகாப்பு வலைப்பின்னல்(Unseen Defence Network) எனப்படும் புதிய இராணுவ அமைப்பை உருவாக்குவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்பு தளமான Quwa குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, வான் பாதுகாப்பு அமைப்புக்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் ஒளியக்கூடிய அளவில் இது உருவாக்கப்பட உள்ளது.
குறித்த அமைப்பில் sensor பொதிந்த நவீன டேட்டா லிங்க்(TDL) அடிப்படையிலான இராணுவ தகவல் பரிமாற்ற அமைப்பாக செயற்பட உள்ளது.
பாதுகாப்பு மேலாண்மை
தாக்குதலின் ஆபத்துக்களை முன்கூட்டியே உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த அமைப்பு உதவும்.
இது ஒரு புதிய போர்மொழியை உருவாக்கும் திட்டம் என பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் விமானப்படை மற்றும் பாதுகாப்புத் துறை இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் பெற வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய வான்படையின் ஒபரேஷன் சிந்தூர் தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு மேலாண்மையை முன் நகர்த்துவதற்கான திட்டமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



