ஹட்டனில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று 19.08.2021 வியாழக்கிழமை லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.
எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.
எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 75 சிலிண்டர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாகவும் எரிவாயு விற்பனையாளர் கூறினார்.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
