கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் மீண்டும் அமைதியின்மை: கைதிகள் தப்பியோட்டம்
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் நடவடிக்கை
வெலிகந்தை கந்தகாட்டு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 கைதிகள் நேற்று புதன்கிழமை (24.1.2024) இரவு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தப்பிச்சென்றவர்களில் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மைய ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் தப்பிச்சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
