மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய மலை நாட்டில் கடந்த சில வாரங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பகுதிகளுக்கு அடை மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் குளிர் மற்றும் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தேயிலை உற்பத்தி சரிவு
அடை மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களின் வருகை குறைவடைந்துள்ளது.
இதனால் தேயிலை உற்பத்தியும் ஓரளவு சரிவடைந்துள்ளதாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகி வருவதனால் காசல்ரி, மவசாகலை, கெனியோன், லக்ஷபான,விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளன.
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு
இதனால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் செயழிலந்து கிடந்த சிறிய நீர் மின் உற்பத்திகளும் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளன.
போக்குவரத்து பொலிஸாரின் கோரிக்கை
மழையுடன் அடிக்கடி பனிமூட்ட காணப்படுவதனால் மலையக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன, நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இதனால் இந்த வீதியில் பயணஞ் செய்யும் சாரதிகள் மற்றும் பொது
மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
