கனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம்
கனடாவில் வரலாறு காணாத அளவில் பணவீக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் வருடாந்த பணவீக்க வீதம் ஐந்து வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் கடந்த 30 ஆண்டுகளில் முதல் தடவையாக இவ்வாறு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 4.8 வீதமாக காணப்பட்டதாகவும் இந்த ஆண்டில் அது 5.2 வீதமாக உயர்வடைந்துள்ளது வீடுகள், எரிபொருட்கள் மற்றும் மளிகை பொருட்களது விலைகளின் அதிகரிப்பே இவ்வாறு பணவீக்கம் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களுக்கு இடையிலும், நகரங்களுக்கு இடையிலும் பணவீக்க வீதத்தில் வேறுபாடு காணப்படுவதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
