சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில்: ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானம்
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) பூரண ஆதரவை வழங்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கும் அவரின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தவிசாளரின் கருத்து
அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்துவதில்லை எனவும் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவி்த்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |