ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சி தேர்தலில் யானை சின்னத்தில் போட்டி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி(UNP), அதன் சின்னமான யானை சின்னத்தின் கீழ் பல உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
2025 பெப்ரவரி 14ஆம் அன்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யானை சின்னத்தில் போட்டி
கூட்டத்தின் போது, புதிய நியமனங்கள் செய்யப்பட்டன, மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை போன்ற முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
இதன்போதே கட்சியின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, "யானை" சின்னத்தின் கீழ் நான்கு மாநகரசபைகளில் போட்டியிட முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் கொழும்பு, கண்டி, காலி மற்றும் நுவரெலியா மாநகரசபைகள் அடங்கும்.
இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan
