ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக்கட்சியின் பிரபல அரசியல்வாதிகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த இரண்டு பிரபல அரசியல்வாதிகள் விரைவில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளதாக சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மலையக மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசியலவாதிகள் இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கூறப்படுகிறது.
இவர்களில் ஒருவர் நீண்டகாலமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வகித்து வந்தவர் எனவும் மற்றையவர் மாகாண முதலமைச்சர் பதவி உட்பட பல உயர் பதவிகளை வகித்தவர் எனவும் பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைமை மீதான அரசியல் ரீதியான அதிருப்தி மற்றும் ஏனைய அரசியல் விடயங்களை அடிப்படையாக கொண்டு இவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
