அரசாங்கத்தின் சாபத்தினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது
உலக போர் நிலைமைகளினால் நாடு நெருக்கடியை எதிர் நோக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிய பொய்களினால் நாட்டுக்கு சாப நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பில் மக்கள் புத்தி கூர்மையுடன் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலைமை அல்லது போர் நிலைமை உடனடியாக ஏற்படவில்லையென அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த போர் இடம்பெறும் என்பது குறித்து நாம் அனைவரும் அறிந்திருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகளின் போது இந்த பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பதை நிர்வாகம் செய்வதற்கே நாட்டில் அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லாத அரசாங்கம் நாட்டுக்கு எதற்கு என ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரச்சினைகளை நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் அமைச்சரவை எதற்கு உயர அரசு அதிகாரிகளுக்கு எதற்காக சம்பளம் கொடுக்கப்படுகின்றது? எதிர்காலத்தில் போர் ஒன்று ஏற்படப் போகின்றது என்பது குறித்து யூகிக்க அவர்களால் ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் பொய்யுரைத்து ஆட்சி பீடம் ஏறியதுனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவிடம் இருந்து ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என்றால் அவர்கள் விலை கூடுதலாக கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜனாதிபதி கூறுவது போல தனியார் துறைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் நடவடிக்கையை ஒப்படைத்தால் அது விலை அதிகரிப்பை பாரிய அளவில் ஏற்படுத்தும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீனுடன் ஊடக ஜாம்பவானின் இரகசிய உறவு! அம்பலப்படுத்திய அமெரிக்க நீதித்துறை கோப்புகள் - திடுக்கிடும் தகவல்கள்
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri