ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏகமனதான தீர்மானம்
கூட்டணி ஒன்று அமைக்கப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில், அவ்வாறான எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் மேற்கோள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், கட்சியின் ஏகமனதான தீர்மானம் எது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
