உலக சந்தையில் இயற்கைக்கு மாறாக அதிகரித்துள்ள எரிவாயு விலை
லாஃப் எரிவாயு நிறுவனம், எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அடுத்த வாரத்திற்குள் நிதி அமைச்சகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலை என்பன உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், லாஃப் எரிவாயுவைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் நிறுவனம் நட்டமடைந்து விடும். எனவே, நிதி அமைச்சகம் மற்றும் அரச எரிவாயு நிறுவனம் என்பன நிலைமையைச் சரிசெய்ய அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , எரிவாயு பற்றாக்குறை, எரிவாயுவை இறக்குமதி செய்வதற்குத் தேவையான கடன் கடிதங்களைத் திறக்கும் பிரச்சினை காரணமாக உருவாக்கப்பட்டது என்று லாஃப்ஸ் கேஸ் நிறுவனத் தலைவர் கே.வி.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வங்கிகளிடமிருந்து கடன்களுக்காக டொலர்கள் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த பிரச்சினை எழுந்தது என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டில் அந்நிய செலாவணி பிரச்சினையால் நாட்டிற்கு இன்று கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் கடந்த ஒன்றரை வருடமாக உலக சந்தையில் இயற்கைக்கு மாறான எரிவாயு விலை அதிகரிப்பாகும் என்றும் வேகப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.