உக்ரைனுக்கு வெளியே ரஷ்யா சந்திக்கும் புதிய ஆபத்து(Video)
அண்மைக்காலமாக ரஷ்யா பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
ரஷ்யாவில் இடம்பெற்ற 36 மணிநேர இராணுவ புரட்சி, உக்ரைன் யுத்தத்தில் மாபெரும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருந்த வாக்னர் குழுவின் வெளியேற்றம், இராணுவ புரட்சிக்கு ரஷ்ய உயர் அதிகாரிகளே இரகசிய ஆதரவு வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில இடங்களை நோக்கிய உக்ரைன் படைகளின் முன்னேற்றம் ரஷ்யாவிற்கு சவால்கள் நிறைந்தவையாகவே இருந்து வருகின்றன.
பலமான பாதுகாப்பு நிலையங்கள், பல அடுக்கு பாதுகாப்பு வலயங்கள் கொண்டு முன்னேறி வரும் உக்ரைன் படைகளுக்கு ரஷ்யா சேதங்களை செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யா வெற்றி பெற்றாலும் அது வல்லரசு போட்டியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்த வல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.