இந்தியாவுக்கு இலங்கையிலிருந்து வெடிபொருட்களை கடத்திய உளவாளிகள்! வெளிவரும் பகீர் தகவல் (Video)
2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜேர்மன் பேக்கரியில் சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்தது.
அந்த குண்டுவெடிப்பில்17 பேர் கொல்லப்பட்டதுடன் 60இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
விசாரணை சிபிஐயிடம்
இரண்டு முஸ்லிம் அமைப்புக்கள் அந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தனர்.
இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த பூனே குண்டுத் தாக்குதல் பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை சீபிஐயிடம் ஒப்படைத்திருந்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
ஜேர்மன் பேக்கரியை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இந்தியா முழுவதும் தேடி அலைந்தது இந்திய மத்திய புலனாய்வு பிரிவு.
ஏழு மாதங்களின் பின்னர் அந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர்.
முழு இந்தியாவையும் உலுக்கிய இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் விரிவான தகவல்களை சுமந்து வருகின்றது எமது உண்மையின் தரிசனம்..