இலக்கு வைக்கப்பட்ட கருணா! இறுதி வரை நடந்தது என்ன? (Video)
2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்காம் திகதி கருணா(விநாயகமூர்த்தி முரளிதரன்) விவகாரத்தில் முதலாவது துப்பாக்கி வேட்டு பகிரங்கமாக தீர்க்கப்பட்டது.
கருணாவின் முக்கிய ஆதரவாளரும் கிழக்கு பல்லைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஒரு கருணா தரப்பு முக்கியஸ்தர் மீதே அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இலங்கை முழுவதுக்குமான ஒரு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் கிழக்கில் வன்முறைகள் படிப்படியாக நடைபெற ஆரம்பித்தன.
2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் கருணா மீதான தமது இராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பித்திருந்தன.
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது உண்மைகள் பாகம் 12 விசேட தொகுப்பு,