மர்மமான முறையில் உயிரிழந்த நபர்: ஆடைகளற்ற நிலையில் சடலம் மீட்பு
மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ - மேற்கு தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்கள்
தச்சு தொழிலாளியான குறித்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் இருந்த இடத்திற்கு அருகில் தேவாலய மைதானத்தில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆடைகளை பொலிஸார் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடைகள் உயிரிழந்த நபருடையது என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணை
இறந்தவரின் தலையில் இருந்து இரத்தம் வெளியேறியிருந்ததாகவும் மரணம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 19 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
