போதைப் பழக்கத்திற்கு அடிமையான பிரபல கிரிக்கெட் வீரர்
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சீன் வில்லியம்ஸ் போதைப் பழக்கத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், அவர் மீண்டும் நாட்டிற்காக விளையாட மாட்டார் என்று தேசிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
39 வயதான சகலத்துறை ஆட்டக்காரரான அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றும் சிம்பாப்வே கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது.
தேசியத் தேர்வு
ஹராரேவில் நடந்த ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க தகுதிச் சுற்று 2025க்கு முன்னதாக வில்லியம்ஸ் போட்டிகளில் இருந்து விலகினார்.

இதனையடுத்து, தாம் போதைப் பழக்கத்தால் போராடி வருவதாகவும், தானாக முன்வந்து மறுவாழ்வில் சேர்ந்துள்ளதாகவும், வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், விடயத்தை கவனமாக பரிசீலித்த பிறகு, வில்லியம்ஸ் இனி தேசியத் தேர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam