பேராதனை பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கற்கும் நான்காம் வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் உயிரை மாய்த்துக் கொண்டவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த யு.ஜி.எஸ்.சசங்க என்ற வயது 25 மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொறியியல் பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மாணவன் பரீட்சையின் இறுதித் நாள் பரீ்டசையை தவிர ஏனைய அனைத்து பாடங்களுக்கமான பரீட்சை எழுதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறுதி பரீட்சை வினாத்தாளில் குறித்த மாணவன் விடையளிக்கத் தவறியதையடுத்து, அவரது நண்பர்கள் அவரைத் தேடியபோது, அவரது கையடக்க தொலைபேசி செயலிழந்து காணப்பட்டுள்ளது.
இதன்போது விடுதியில் குறித்த மாணவனை தேடும் போது அவர் தனது அறையினுள் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என இரண்டு நண்பர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ந்த போது “மன்னிக்கவும், இது யாருடைய தவறும் அல்ல. இந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியாது” என மாணவன் எழுதிய கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.