வாடகை வீட்டில் மர்மமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி - சடலத்திற்கருகில் மீட்கப்பட்ட பொருள்
புதிய இணைப்பு
பாணந்துறை பகுதியில் உள்ள வீட்டில், கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளம் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வந்த நிலையில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த போதே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப்பரிசோதனை
இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்று அருகில் கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கமைய, சடலம் மீதான பிரேதப் பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பாணந்துறை, வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கனுவ வீதியில் உள்ள வாடகை வீட்டில் இளம் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்கனுவ வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த, நதுனி சஹஸ்ரீ கூரே என்ற 26 வயது திருமணமாகாத இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்
பொலிஸார் விசாரணை
குறித்த யுவதி தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வந்த நிலையில், வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும், இந்த வீட்டிலிருந்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், கூடுதலாக ஒரு வழக்கறிஞராக சட்டப்பணிகளையும் செய்து வந்துள்ளார்.
இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து பாணந்துறை, வடக்கு பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றது.
you may like this video
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam