பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்
வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பல்கலைக்கழக பூங்கா வீதி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததன் பின்னர், அலுவலக வாயிலில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் புகையிரத வீதியூடாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எம்.சீ.ஏ கொடுப்பனவை அதிகரி, அரசே 107 வீத சம்பள அதிகரிப்பை வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிவாறு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் சங்கமும் ஆதரவு வழங்கி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த அழைப்பு விடுக்கப்பட்டமைக்கமைய, இன்று திங்கட்கிழமை(13) காலை 10 மணியளவில் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செய்தி - தீபன்
கிழக்கு பல்கலைக்கழகம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் இன்றுடன் 12 நாட்களாக முன்னெடுக்கும் தொடர் பணி பகிஷ்கரிப்பின் ஓர் அங்கமாக, கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட நிகழ்வு இன்று மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்க வெளிவாரி கற்கைகள் நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
செய்தி - குமார்
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் அறிக்கை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்கிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் கடந்த 2ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் த.சிவரூபன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி சாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக தமது சம்பள இடர்பாட்டிற்கான தீர்வுகளை 8 வருடங்களிற்கு மேலாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சிடம் இதுதொடர்பாக கடிதங்களை எழுதியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் எந்தப்பலனும் இல்லாத காரணத்தினால் நாம் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
இதற்கான காரணங்களை விபரிக்கின்றோம். A. MCA கோரிக்கை கடந்த காலங்களில் அதிகரிப்பை தரவேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மோகன் டி செல்வா காலப்பகுதியில் அதன் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2016 இற்கு பின் இன்றுவரை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
B. 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 107% ஆல் 2020ம் ஆண்டில் அதிகரித்த போதும் எமக்கு 93% க்கு குறைவாகவே அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இவற்றை மறுசீரமைத்து எமது இவ் வேண்டுகோள்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் கோவைற் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் நாம் மௌனம் சாதித்த போதிலும் எமது கோரிக்கைகளை அவ்வப்போது வலியுறுத்தியே வந்துள்ளோம்.
இவை தொடர்பான கோரிக்கைகள் 2016
முன்வைக்கப்பட்ட போதும் எமது முயற்சிகள் பின்வருமாறு அமைந்து தோல்வியை தழுவின.
அவை பின்வருமாறு.