இலங்கையை அச்சுறுத்தும் சீரற்ற காலநிலை - பல்கலைக்கழக மாணவன் பலி
காலி, பிட்டிகல - பெலவத்த வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஹல ஹேவஸ்ஸ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மாணவன் பலி
உயிரிழந்த இளைஞன் இம்முறை உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த மாணவர் என தெரியவந்துள்ளது.

நேற்று நிலவிய கடும் மழையின் போது வேலைக்கு சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan