பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!விசாரணைகள் தீவிரம் (VIDEO)
காணாமல்போயிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில்,பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவனின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காண்பித்திருந்தனர்.
24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்
இந்த நிலையில், மாணவன் தங்கியிருந்த அறையில் கடிதம் ஒன்றும், அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் அவரது மூக்குக்கண்ணாடி என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அறையிலிருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் “ என்னை மகாவலி ஆற்று பகுதியில் சந்திக்கலாம்.என்னை மன்னித்துவிடுங்கள்” என இரவு 8 மணி நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த கடிதத்தினை மாணவன் காலை 6 மணியளவில் எழுத ஆரம்பித்த நிலையில் பின்னர் இடைநிறுத்திவிட்டு பல்கலைக்கழகத்திற்கு சென்று கற்றல் நடவடிக்கையிலும் வழமைப்போல் ஈடுபட்டுள்ளார்.
பல்கலைக்கழகம் நிறைவு பெற்ற உடன் மீண்டும் தங்கியிருந்த அறைக்கு வந்து கடிதத்தினை தொடர்ந்து 8 மணியென நேரம் குறிப்பிட்டு தொடர்ந்து எழுதி முடித்துள்ளமையும் ரெியவந்துள்ளது.
இறுதி வார்த்தைகள்
இருப்பினும் இறப்பதற்கு முன்னர் 7 மணியளவில் அவரது தாயார் மகனுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளதாகவும் இறுதியாக தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,குறித்த மாணவனுக்கு உளவியல்துறை தொடர்பான விரிவுரைகளை வழங்கும் விரிவுரையாளரொருவர் ‘ அஞ்சன குலதுங்க எனது சிறந்த மாணவன். நிறைய பேரின் பிரச்சினைகளுக்கு தீர்வினையும்,பல ஆலோசனைகளையும் கூறிய நீங்கள் உங்களது பிரச்சினையை பகிர்ந்துக்கொள்ள ஒருவரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம் எனவும் பேஸ்புக்கில் பதிவொன்றினை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.