பேராதனை பல்கலைக்கழகத்தில் தீவிரமடையும் பகிடிவதை! பலர் வைத்தியசாலையில் அனுமதி
பேராதனை பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த 11 மாணவர்களை மற்றுமொரு மாணவர்கள் குழுவொன்று தாக்கிய சம்பவம், அங்கிருந்த மாணவர் ஒருவரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலைப்பீட மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்
உணவருந்துவதற்கு மாணவர் குழு ஒன்று தடை விதித்த போதிலும், புதிய மாணவர்கள் அங்கு உணவருந்தியமையே தாக்குதலுக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கலைப்பீட மாணவர்கள் மூவரை இடைநிறுத்தம் செய்ய
பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.